Wednesday, December 1, 2010

கொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்

பொதுவாகவே குமரி மாவட்டம் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பதால் டிசம்பர் மாதம் துவக்கத்திலே கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள் துவங்கி விடும். அதே போல் கன்யாகுமரி பேராயத்திற்கு உட்பட்ட  வட்டார தலைமை சபையான கொற்றிகோடு சபையில் இன்று (1-12-2010) முதல் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள் துவங்கி விட்டன . 
இன்று (1-12-2010) முதல் கிறிஸ்து பிறப்பு பாடல் பவனிகள் துவங்குகின்றன . ஒவ்வெரு நாளும் ஒவ்வெரு பகுதியாக நடைபெறும் இந்த பாடல் பவனி 16 தேதி முடிவடைகிறது . வெள்ளை உடைகள் அணிந்து பாடல் குழுவினரோடு சபை போதகர்கள் மற்றும் டீக்கன்மார்களும் பாடல் பவனியில் செல்லுகின்றனர். இந்த பாடல் பவனி அனைத்து சபை அங்கத்தினர்கள் வீடுகளுக்கு சென்று கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களை சொல்வார்கள் .


டிசம்பர் 19 ஞாயிற்று கிழமை அன்றுபெரிய அளவிலான விற்பனை விழா நடை பெறவிருக்கிறது . இந்த விற்பனை விழாவில் சபை மக்கள் மட்டுமல்லாது மற்ற மக்களும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பொருட்களாகவோ, பணமாகவோ வைப்பார்கள் . சனிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்தே துவங்கும் பொருட்கள் வைப்பது மறுநாள் காலை 10 மணி வரை நடை பெறும் . அதற்கு பின்னரும் பொருட்களை வைக்கலாம் . அப்படி வைக்கும் பொருட்கள் பரிசு போட்டியில் இடம் பெறாது . ஒவ்வெரு பொருட்களுக்கும் முதல் இரண்டாம் பரிசு உண்டு . 

குமரி பேராயத்திற்குட்பட்ட சபைகளில் ஒரு நாள் வருமானத்தில் அதிகமாக வருமானம் வருவது கொற்றிகோடு சபை என்பது குறிப்பிட தக்கது . ஒவ்வெரு ஆண்டும் இந்த விற்பனை விழாவிற்கு மற்ற சபைகளை போட்டிபோடும் அளவிற்கு மக்கள் பொருட்களை படைப்பார்கள் . காலை 10 மணி முதல் போதகர் ஜெபத்தோடு ஏலம் ஆரம்பமாகும் . அன்று மாலையே ஏலம் முடிந்து விடும் . 

அதை தொடர்ந்து ஒவ்வெரு நாளும் மாலை 6 மணிக்கு ஒவ்வெரு பிரிவினர்களுக்கான நிகழ்வுகள் நடைபெறும் . கிறிஸ்து பிறப்பிற்கு முந்தின நாள் இரவு ஆயத்த ஆராதனையும் . விடியற்காலை கிறிஸ்து பிறப்பு ஆராதனையும் நடை பெறும் . 25 தேதி காலை போது விளையாட்டு போட்டிகள் நடைபெறும் . அதை தொடர்ந்து மதியம் ஓய்வு நாள் பாட சாலை மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடை பெறும் . 

பின்னர் இந்த நிகழ்வுகள் ஒவ்வெரு நாளும் மாலை நடை பெற்று புத்தாண்டு ஆராதனையோடு 1 ஆம் தேதி விடியற்காலை முடிவுறும் . அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் ............................



6 comments:

Sajithra said...

Nice to hear the updates from kotticode. Keep up the good work :-)

Kotticode said...

Thanks Sajithra for your comments.........

DEVA ANBU said...

>>--HAPPY CHRISTMAS-->

Unknown said...

intha yr mahohara chanthai cash fulla namma church virivakka velai start pannuvatharkaga mudivu seiya pattu ulla thu... so nall amont collectionukaga nan ellorum prayer pannuvom... nalla manam thode kanikaigalai tharazhamai padaipom... namathu church in perumai yai nilainattuvom......

Unknown said...

கி‌றி‌‌‌ஸ்‌ம‌ஸ் நா‌ட்களு‌க்கு மு‌ன்னதாகவே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா‌வி‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நட‌த்த‌ப்படு‌ம். ஒ‌வ்வொரு ‌கி‌றி‌‌ஸ்துவ ‌வீடுக‌ளு‌க்கு‌‌ம் ‌கி‌றி‌‌ஸ்ம‌ஸ் தா‌‌த்தா செ‌ன்று இயேசு ‌கி‌றி‌‌ஸ்து‌வி‌ன் து‌திபாடலை பாடி ம‌கி‌ழ்‌ந்து உ‌ற்சாகமாக ஆடுவா‌ர்க‌ள்.

ஒ‌வ்வொரு ‌வீடு‌க‌ளிலு‌ம் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா‌வி‌ன் வரவை பெ‌‌ரியவ‌ர்களு‌ம், ‌சிறுவ‌ர்களு‌ம் ஆன‌ந்தமாக எ‌தி‌ர்நோ‌க்‌கி இரு‌ப்ப‌ா‌ர்க‌ள்.

‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா வ‌ந்தவுட‌ன் இயேசு பால‌ன் ‌பிற‌ந்தா‌ர் எ‌ன்ற புது‌ப்பாட‌ல் பாட‌ப்ப‌ட்டு குழ‌ந்தைக‌ளு‌க்கு இ‌னி‌ப்பு வழ‌ங்க‌ப்படு‌ம். ‌அ‌ப்போது இயேசு பால‌னி‌ன் ‌பிற‌ப்பு ப‌ற்‌றிய ந‌ற்செ‌ய்‌தியை அனைவரு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சிகரமாக கூற‌ப்படு‌ம்.

இத‌ி‌ல் அநேக ‌விசுவா‌சிக‌ள் கல‌ந்து கொ‌ண்டு இரவு நேர‌ங்க‌ளி‌ல் இயேசு‌வி‌ன் ‌பிற‌ப்பு நாளான ‌கி‌‌‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை ப‌ற்‌றி கூற‌ப்படு‌ம்.

அ‌ப்போது பெ‌ரியவ‌ர்க‌ள், இளைஞ‌ர்க‌ள், ச‌ிறுவ‌ர்-‌சிறு‌மிக‌ள் கல‌ந்து கொ‌ண்டு ‌கி‌‌றி‌ஸ்து‌வி‌ன் ‌பிற‌ப்பை ப‌ற்‌றி உ‌ற்சாகமாக அனைவ‌ரிட‌த்‌திலு‌ம் செ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

இ‌ப்போதெ‌ல்லா‌ம் பல பகு‌தி‌க‌ளிலு‌ம் டிச‌ம்ப‌ர் மாத‌ம் துவ‌ங்‌கிய‌தில‌் இரு‌ந்தே பெ‌‌ரிய பெ‌ரிய வ‌ணிக ‌நிறுவ‌ன‌ங்க‌ளி‌‌ன் ‌வா‌யி‌ல்க‌ளி‌ல் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா ‌நி‌ன்று கொ‌ண்டு கடை‌க்கு வரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை அ‌ளி‌‌‌ப்பதை‌யு‌ம், பெ‌ரியவ‌ர்களு‌க்கு கைகுலு‌க்‌கி வா‌ழ்‌த்து‌க்க‌ள் கூறுவதையு‌ம் காணலா‌ம்.

Anonymous said...

கொற்றிகோடு சபை மக்களுக்கும், குமரி பேராயத்திற்குட்பட்ட சபை மக்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என்னுடைய குடும்பத்தின் சார்பாகவும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு 2011 நல்வாழ்த்துக்களையு‌ம்தெரிவித்துக்கொள்கிறேன்.அன்புடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை.தொடர்புக்கு கைபேசி எண் : +91 - 9094651688.

Post a Comment

Updates Via E-Mail