Wednesday, July 8, 2009

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி

கபடி விளையாட்டானது தமிழர்களால் அதிகமாக விளையாடப்படும் ஒரு விளையாட்டாகவும் வீர விளையாட்டாகவும் இருந்து வருகிறது . இரு அணிகளாக விளையாடப்படும் இந்த விளையாட்டில் ஒவ்வெரு அணியிலும் ஏழு பேர் விளையாடுவார்கள் .

கபடி மைதானம் 12.5 m X 10 m அளவு கொண்டதாக இருக்கும் . இதில் நடுவே ஒரு கோடால் பிரிக்கப்படும் இரண்டு பக்கமும் இரண்டு அணிகள் மோதும் . ஒரு அணியிலிருந்து இன்னொரு அணியின் கோட்டைக்கு நாடு கோட்டை தாண்டி செல்ல வேண்டும் . ஒரே மூச்சில் கபடி கபடி என்று சொல்லி செல்ல வேண்டும் . அவ்வாறு சென்று எதிரணி வீரகளை தன்னுடைய காலாலோ கையாலோ தொட்டு நாடு கோட்டை தாண்டி வர வேண்டும் . அப்படி நாடு கோட்டை தாண்டி வந்தால் எத்தனை நபரை தொட்டோமோ அதற்காக ஒவ்வெரு நபருக்கும் ஒரு புள்ளி வீதம் நமக்கு அந்த அணிக்கு கிடைக்கும் . அவ்வாறு தொடபட்டவர்கள் வெளி ஏற்றபடுவார்கள் .

கபடி கபடி என்று சொல்லி கொண்டே போக வேண்டும் இதை பாடி செல்லுதல் என்பார்கள் . இப்படி செல்லும் போது எதிரணியினர் பிடித்து விட்டால் பாடி சென்றவர் வெளி ஏற்றபடுவார் . அவரால் நடுகொட்டை தாண்ட முடியாமல் எதிரணியினர் பிடித்தால் அந்த அணிக்கு வெற்றி புள்ளி செல்லும் . இந்த ஆட்டம் மொத்தம் 40 நிமிடங்கள் இடைவேளை உட்பட நடைபெறும் . கடைசியில் யாருக்கு வெற்றி புள்ளிகள் அதிகமாக இருக்குமோ அவர்கள் வெற்றி பெற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்படும் .

இந்த விளையாட்டு கிராம புறங்களில் மிகவும் விறுவிறுப்பாகவும் பாற்பவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் நடைபெறும் . உலக நாடுகளை பொறுத்தவரையில் தெற்காசிய நாடுகளில் அதிகமாக இந்த விளையாட்டுகள் நடைபெறும் . தமிழ் நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வெரு மாவட்டம் தோறும் கபடி கழகங்கள் அமைத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர் .

Updates Via E-Mail