Thursday, December 25, 2008

பத்தாவது ஆண்டுவிழா அழைப்பிதழ்

கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்
..............................
பத்தாவது ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்
...........
நாள் : 31-12-2008 , 01-01-௨௦௦௯.
............................................................................................................
கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் - இது வரை காலமும் பல தடைகளை கடந்து இன்று தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த வலைபூ வழியாக தெரிவிப்பதில் மகிழ்ச்ச்யடைகிறேன் விளையாட்டில் இளைஞர்கள் அதிகமாக பங்கெடுக்கவும், அதே நேரம் சமூக தொண்டுகளிலும் மிகுந்த ஈடு பாடுடன் செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கமானது எந்த ஒரு பின் பலமும் இல்லாமல் இளைஞர்களின் உழைப்பை நம்பியே துவங்கப்பட்டது . சில அரசியல் காரணங்களுக்காக இந்த இயக்கத்தை பயன் படுத்த நினைத்த அரசியல் வாதிகளின் எதிர்ப்பையும் மீறி இன்று பத்தாவது ஆண்டுவிழாக்கள் கொண்டாடிவருகின்றோம்.
...........................................................................................................................................
எமது இயக்க உறுப்பினர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று பல வெற்றிகளை பெற்று கொற்றிகோட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த ஆண்டுவிழாவின் போது மட்டைபந்து போட்டி இரண்டு வாரமாக நடைபெற்று முடிந்து விட்டது. டிசம்பர் முப்பதொன்றாம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி மாவட்ட கபடி கழகத்தினரின் மேற்பார்வையில் நடைபெற இருக்கிறது, அதன் மறு நாள் புத்தாண்டு அன்று காலை ஆறு மணியளவில் போது ஓட்டம், நீளம் தாண்டுதல்,வடம் இழுத்தல், குண்டு எறிதல், பத்து மணியளவில் மாபெரும் கைபந்து போட்டியும் நடைபெறவுள்ளது .மாலை மூன்று மணியளவில் இயக்க சிறுவயது உறுப்பினர்களுக்கான கபடி போட்டியும் நடைபெறும் . மாலை ஆறு மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் . போது கூட்டத்தில் சிறுவர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு ஏழைகளுக்கு இலவச துணி வழங்கப்படும். முடிவில் ஆட்டமும் பாட்டமும் நடத்தப்படுகிறது.
அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர் .
இவண்
விழா குழுவினர்

Updates Via E-Mail